சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் ஸ்ட்ராபெர்ரி போல க்யூட்டாக இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மயங்கிப்போனார்கள்.
2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதன் பின் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் இந்த படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு எதிர்பார்த்த படி படவாய்ப்பு வரவில்லை.
ரம்யா பாண்டியன்: எப்படியாவது படவாய்ப்பை பெற வேண்டும் என முடிவு எடுத்த ரம்யா பாண்டியன் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இன்ஸ்டாவில் விதமான போட்டோவை பதிவிட்டு வந்தார். இவர் எடுத்த மொட்டைமாடி போட்டோஷூட் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. வளைந்து தெளிந்த தனது இடையழகை காட்டிய இவர் எடுத்த போட்டோஷூட் ஓவர் நைட்டில் பிரபலமாக்கிவிட்டது. அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்தார்.

விஜய் டிவியில்: இதையடுத்து, விஜய் டிவியின் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதெல்லாம் போதாது என்று பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு மூன்றாவது ரன்னர் அப்பாக வந்தார்.
நண்பகல் நேரத்து மயக்கம்: அதன் பின் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கேரள மாநில அரசு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், இதில் அபாரமாக நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ட்ராபெர்ரி பெண்ணே: நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேடித்தேடி வரும் நடிகை ரம்யா பாண்டியனுக்கு சொல்லும் கொள்ளும் வகையில் நச்சுனு ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதைவெளிக்காட்டி கொள்ளாமல், தன்னை வாழவைத்த இன்ஸ்டா வாசிகளை மகிழ்விக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் பிங்க் நிற மார்டன் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. விண்வெளி கண்ணே.. ரம்யா பாண்டியனை வர்ணித்து பாட்டுப்பாடி வருகின்றனர்.