சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி யுவராஜா கோபால் தெரிவித்த இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவராஜா கோபால் 36 என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவர் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கில் சிங்கப்பூர் காவல் துறையில் இனப் பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.இதற்கிடையே சமீபத்தில்தன் வீட்டில் யுவராஜா கோபால் இறந்து கிடந்தார்.
இனப் பாகுபாடு குறித்து யுவராஜா கோபால் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்குசிங்கப்பூர் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம்உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணயை முடித்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் அட்டர்ஜி ஜெனரலிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மேலதிகாரிகள் மற்றும் சக போலீசார் மீது யுவராஜா கோபால் பல முறை புகார் அளித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளில் அவர் ஆறு வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் பணியில் நிலையாக இல்லை.- வேலை செய்வதில் சிரமத்தை எதிர் கொண்டதால் அவருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கடந்த பிப். 16ல் கூட புதிய பிரிவுக்கு யுவராஜா கோபால் மாற்றப்பட்டார். அப்போது கூட உணர்வுரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட விடுப்புகளை காட்டிலும் அதிக விடுப்புகளை அவர் எடுத்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதங்கள் ஏந்தும் பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும் பண தகராறில் தன் சகோதரரை யுவராஜா கோபால் தாக்கி உள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனப் பாகுபாடு குறித்து அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement