வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய ரயில்வே வெப்சைட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் ஓப்பன் ஆகவில்லை. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு, கேன்சல் செய்ய முடியாமல் பலரும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பராமரிப்பு காரணமாக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சீராகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அமேசான், மேக் மை டிரிப் போன்ற இதர தளங்களின் வாயிலாக டிக்கெட் புக் செய்யலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
அவசர உதவிக்கு கஸ்டமர் கேர் எண்கள் 14646, 0755-6610661, மற்றும் 0755-4090600, தொடர்பு கொள்ளலாம். [email protected]. என்ற மெயிலிலும் விசாரிக்கலாம். இவ்வாறு தென்னக ரயில்வே கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement