பொன்னேரி எந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்குக் கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பெருமளவில் அதில் பயணம் செய்தனர். ரயில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென மின்சார ரயிலில் உள்ள ‘பான்டோ கிராப்’ என்ற கருவியின் […]
