இந்தியாவின் மேற்கு பங்காளத்தில், கல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்திற்கு சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜயகொடி அங்குள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக விஜயம் மேற்கொண்டார்.
ஒரு நாளைக்கு 3000 பேர் அளவில் ஹோமியோபதி சிகிச்சை வழங்கப்படும் இந்த வைத்தியசாலையில் புற்றுநோய், சிறுநீரக நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன் அதற்காக மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது.
இத்தேசிய ஹோமியோபதி நிறுவனத்தில் நாட்டின் சுதேச வைத்திய அமைச்சர் ஒருவர் மேற்பார்வை மேற்கொண்ட சந்தர்ப்பம் இது என்பதுடன் இந்நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சுபாஷ் சிங் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்தியாவின் அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவப் பட்டத்தை மேற்கொள்வதற்காக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் நடைபெறுகிறது. தற்போது 3 வருடங்களாக தொடர்ச்சியாக இப்புலமைப் பரிசில் நிகழ்ச்சி நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இவ்விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தின் இலங்கை மாணவர்கள் பத்துப் பேருக்காக இலவச புலமைப் பரிசில் வழங்க முடியுமாகவுள்ளது.
தற்போது இலங்கை மாணவர்கள் 40 பேரளவில் இந்த மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்வதுடன், இச்சுற்றுப் பயணத்தின் போது ஹோமியோபதி வைத்திய முறை நாட்டில் மேலும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என ஹோமியோபதி வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பத தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடப்படுவதுடன் ஹோமியோபதி மருந்துகள் இலங்கையில் உற்பத்தி செய்வதற்காக அவசிய உதவிகள் பெறப்படுவதற்காக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
இச்சுற்றுப் பயணத்தில் ஹோமியோபதி வைத்திய சபையின் தலைவர் வைத்தியர் அஷான் துணுகார உட்பட பலர் கலந்துகொண்டனர்.