தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருபவர் தான் தனுஷ். துள்ளவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களை சந்தித்து தன் கடின உழைப்பால் இன்று ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார் தனுஷ்.
இவரின் திரைப்பயணம் பலருக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருந்து வருகின்றது. இதையடுத்து தனுஷ் தன் பிறந்தநாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரைப்பற்றிய பல சிறப்பான விஷயங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தனுஷின் பழைய வீடியோக்கள் மற்றும் பேட்டிகள் என அனைத்தையும் எடுத்து எடிட் செய்து தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
ரஜினி தான் சூப்பர்ஸ்டார்
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாக இருக்கின்றது.மேலும் அவர் நடித்து இயக்கி வரும் அவரின் ஐம்பதாவது படத்தை பற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Jujubee: ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு ? சென்சார் குழு சொன்ன விமர்சனம்..!
இதைத்தொடர்ந்து தனுஷ் மேலும் ஒரு தெலுங்கு படத்திலும், பாலிவுட் படத்திலும் நடிக்க இருக்கின்றார். இதனை பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது தனுஷ் பழைய பேட்டி ஒன்றில் தன் மகன் பற்றியும், ரஜினி பற்றியும் பேசியுள்ளார்.
அது தான் தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அவர் பேசியதாவது, தன் மகன் யாத்ரா, வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருளை எல்லாம் தூக்கி போட்டு உடைப்பார். அதுவும் கம்மியான விலையில் வாங்கிய பொம்மையை விட்டுவிட்டு விலை உயர்வான பொருளை மட்டும் தேடி தேடி எடுத்து உடைப்பார்.
அதைப்பார்த்து நான், தம்பி உங்க தாத்தா தான்பா சூப்பர்ஸ்டார், உங்க அப்பா இல்ல. இப்படி காஸ்ட்லியான பொருளா போட்டு உடைக்கிறியே என கேட்பேன் என்றார் தனுஷ். இந்நிலையில் என்னதான் தனுஷ் தற்போது ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்தாலும் ரஜினியின் மீது தனி அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்.
மகனுக்கு அட்வைஸ் செய்த தனுஷ்
ரஜினியின் பட அறிவிப்புகள் ஏதுனும் வெளியானால் அதனை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றார் தனுஷ். இன்றளவும் ரஜினியின் தீவிரமான ரசிகராக தனுஷ் இருந்து வருகின்றார். இந்நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் கேப்டன் மில்லர் டீசரை தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த டீசர் மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தும் என தெரிவது குறிப்பிடத்தக்கது.