Dhanush: Killer.. Killer.. கேப்டன் மில்லர் டீசர் வெளியீடு குறித்து தனுஷ் உற்சாகம்!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் போன்றவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த மாதத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் டிசர் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர் டீசர் வெளியீடு குறித்து தனுஷ் உற்சாகம்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படைப்பாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர். சுதந்திர காலகட்டத்தையொட்டி உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

நீண்ட தாடி, மீசை, தலைமுடி சகிதம் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மற்றப் படங்களை காட்டிலும் இந்தப் படத்திற்காக அவர் மூன்று மடங்கு அதிகமான கால்ஷீட்டை கொடுத்துள்ளார். அந்த வகையில் கேப்டன் மில்லர் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நாளைய தினம் தனுஷ் பிறந்தநாளையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இன்றிரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜான் கொக்கன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Killer Killer என்று தன்னுடைய உற்சாகத்தை வெளியிட்டுள்ளார். இந்த டீசர் 1 நிமிடம் 33 விநாடிகள் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12.01 மணிக்கு இந்த டீசர் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி காமன் டிபியை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். தனுஷின் பிறந்தநாளையொட்டி #happybirthdaydhanush மற்றும் #CaptainMiller ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. ஏராளமான ரசிகர்கள் கேப்டன் மில்லர் டீசருக்காக மரண மாசாக வெயிட்டிங்.

தனுஷ் பிறந்தநாளையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இதனிடையே தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் டி50 படத்தின் டைட்டிலும் நாளைய தினம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வெளியாகும்பட்சத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு அது டபுள் தமாக்காவாக அமையும். டி50 படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்மூலா படத்திலும் பாலிவுட் படத்திலும் நடிக்க தனுஷ் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.