புனே, மஹாராஷ்டிராவில் கணவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அவரது மனைவியை அவர் கண் எதிரிலேயே வட்டிக் கடைக்காரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் கணவர், இம்தியாஸ் ஷேக், 47, என்பவரிடம் 40,000 ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, கடனை திருப்பித் தருமாறு இம்தியாஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போதும் தராத நிலையில், தம்பதியை தனிமையான ஓரிடத்திற்கு இம்தியாஸ் வரவைத்துள்ளார். அங்கு கத்தியை காட்டி மிரட்டி, கணவர் கண் முன்னே அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த காட்சியை தன் மொபைலில் வீடியோ எடுத்த இம்தியாஸ், அடிக்கடி தன் ஆசைக்கு இணங்க அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில், அந்த ஆபாச வீடியோவை இம்தியாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன்படி, இம்தியாசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர், இது போல வேறு யாரையும் மிரட்டி பலாத்காரம் செய்தாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement