சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்துள்ள இந்தப் படத்தில் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு திரைக்கதை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
ஜெயிலர் படத்திற்கு U/V சான்றிதழ்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஜெயிலராக நடித்துள்ளார். ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை நெல்சன் திலீப்குமார் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் பாடல்களுக்கு முன்னதாக நெல்சன், அனிருத் உள்ளிட்டவர்கள் பிரமோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர். இதனிடையே அடுத்ததாக மூன்றாவது சிங்கிளும் வெளியாகியுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டிய ஏற்பாடுகளை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். மாலத்தீவில் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார். அவர் விமானநிலையத்திலிருந்து வெளியில் வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்தின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமையும். அதேபோல நாளைய தினம் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 1000 ரசிகர்கள் பங்கேற்கும்வகையில் இலவச பாஸ்களையும் சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சென்சாரும் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. தன்னுடைய படங்களில் எப்போதும் ரசிகர்களுக்கான மேஜிக்கை வைத்திருப்பார் நெல்சன் திலீப்குமார். விஜய்யின் பீஸ்ட் படத்தில் அதை தர தவறிய நிலையில், தற்போது தனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பான ஜெயிலர் படத்தில் அந்த மேஜிக்கை அவர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.