சென்னை: Singer Chitra (பாடகி சித்ரா) சின்னக்குயில் சித்ரா என ரசிகர்களால் அழைக்கப்படும் பாடகி சித்ராவுக்கு இன்று 60ஆவது பிறந்தநாள்
சித்ரா திருவனந்தபுரத்தில் 1963ஆம் ஆண்டு பிறந்தார். அடிப்படையிலேயே அவரது குடும்பம் இசை குடும்பம். அவரது தாய் வீணை கலைஞராக பணியாற்றிஅனர். அதேபோல் அவரது தந்தை வானொலியில் பாடிக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும்தான் சித்ராவுக்கு இசையை சிறு வயதில் கற்றுக்கொடுத்தனர். குறிப்பாக சித்ராவின் தாய் தினமும் காலையில் பூஜை அறையில் ஆன்மீக பாடல்களை பாட வைத்து சித்ராவை ஊக்கப்படுத்தினார்.
சாதனை செய்த சித்ரா: அதன் பிறகு ஓமனக்குட்டியிடம் இசை பயின்ற அவர், ராகங்களில் கடினமான ராகமாக கருதப்படும் தோடி ராகத்தை பள்ளி படிக்கும்போதே பாடி அசத்திவிட்டார். இதனையடுத்து அவர் கல்லூரியில் இசை படிப்பை எடுத்து படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே மேடை கச்சேரியில் பாடி புகழ் பெற்ற சித்ராவுக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் அமைந்தன.
ததமிழில் இளையராஜா இசையில் அறிமுகமானார். பூவே பூச்சூடவா படத்தில் கமிட்டாகி பாடிவிட்டாலும்; அதற்கு முன்னதாகவே நீதானா அந்தக் குயில் படம் ரிலீஸாகிவிட்டது. அந்தப் படத்தில் பூஜைக்கேத்த பூவிது பாடலை பாடி பட்டித்தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனார். இதனையடுத்து இளையராஜாவின் கோட்டைக்குள் நிரந்தர பாடகியாக நுழைந்துவிட்டார். அப்படி அவர் சிந்துபைரவி படத்தில் நானொரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன் பாடல்களை பாடினார். இதில் பாடறியேன் பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார்.
ரஹ்மானுடன்: இளையராஜா இசையில் அசத்திய சித்ரா அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் தனது குரலை பதித்துவிட்டார். ரஹ்மானின் இசையில் சித்ரா பாடிய கண்ணாளனே, அஞ்சலி அஞ்சலி, தென்மேற்கு பருவக்காற்று, உயிரே உயிரே, தீண்டாய் மெய் தீண்டாய் என பல பாடல்கள் மெகா ஹிட்டாகி இன்றுவரை க்ளாசிக்காக இருப்பவை. குறிப்பாக உயிரே உயிரே பாடலில் எல்லாம் தனது உயிரை கொடுத்து பாடியிருப்பார் சித்ரா.
நடுவர்: பாடகியாக மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்திருக்கிறார். மற்ற நடுவர்கள் எல்லாம் போட்டியாளர்களை எப்படி பேசினாலும் சித்ராவோ அவர்களது மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதை கவனமாக கொண்டு வார்த்தைகளை பயன்படுத்துவார். அவரது இந்த குணத்துக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்: இந்நிலையில் சித்ராவுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது ஓகே கண்மணி படத்தில் ஒரு பாடலை சித்ரா பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்திருக்கிறார் ரஹ்மான். ஆனால் சித்ராவோ உள்நாட்டில் இல்லை. இந்தச் சூழலில் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு நடுவராக வந்த சித்ராவை பார்த்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான், உங்கள் டேட்டுக்காக மூன்று மாதங்கள் ஒரு பாடலை ரெக்கார்ட் செய்யாமல் இருக்கிறேன். எப்போ டேட் கிடைக்கும் என கேட்டிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சித்ரா என்ன ஏ.ஆர்.ரஹ்மானே இப்படி சொல்லிவிட்டார். நமக்காக காத்திருக்கிறார் என நினைத்து உடனடியாக அந்தப் பாடலை பாடிக்கொடுத்தாராம். அந்தப் பாடல்தான் ஓகே கண்மணியில் இடம்பெற்ற மலர்கள் கேட்டேன் என்ற பாடல். இந்தத் தகவலை சித்ரா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். சித்ராவுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..