கடலூரில் என்.எல்.சி. விரிவாக்க பணிகளை கண்டித்து
தலைவர் அன்புமணி தலைமையில் இன்று காலை முதல் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இவர்களது முக்கியமான கோரிக்கை என்.எல்.சி விரிவாக்க பணிகளுக்கு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே ஆகும். இதையொட்டி 10 மாவட்ட போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக் களத்தில் இருந்து அன்புமணியை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீசாரை நோக்கி வாட்டர் பாட்டில்களை பாமக தொண்டர்கள் வீசினர். பின்னர் பதாகைகள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை தூக்கி வீசி எறிந்தனர். இதையடுத்து காலணிகள், கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். இதற்கிடையில் அருகிலிருந்த பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால் வன்முறை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. உடனே லத்தியை எடுத்து வன்முறையை ஒடுக்க போலீசார் புறப்பட்டனர். ஆனால் பாமகவினர் விடவில்லை. இந்த சூழலில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததால் வேறு வழியின்றி வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. பின்னர் வஜ்ரா வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கல்வீச்சு சம்பவத்தில் நெய்வேலி ஆய்வாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.