காரைக்கால்: “பதிஞ்சது பதிஞ்சதுதான் என்னைய செய்யுற அங்க.. ஏழைங்க இங்க நாங்க தெருவுல நிக்கிறோம்.. நீ ஏசி ரூம் -ல இருக்கியா.. வெளிய வாய்யா” என புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 100 நாள் வேலை இல்லை என்று மறுத்ததற்காக ஆவேசமாக பேசி ஒரு பாட்டி, கொந்தளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
என்னய்யா செய்யுற அங்க..வெளியே வாயா.. ஏழைங்க நாங்க தெருவுல நிற்குறோம்.. அதிகாரிங்க ஏசி போட்டு உட்கார்ந்து இருக்கீங்களா.. நாங்க நல்லா ஓட்டு போடுறோம்..நீங்க எங்களை ஏமாற்றிடுங்கள். அப்படீன்னு காரைக்காலில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனுமதிக்காததால், அதிகாரிகளை வசைபாட்டி உள்ளார் ஒரு மூதாட்டி.
அந்த கூட்டத்துல எத்தனையே பேருக்கு மத்தியில் மூதாட்டி கர்ஜித்தது, ஒரு பரபரப்பையும் ஆச்சரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி, நாள் ஒன்றுக்கு சம்பளமாக 600 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டமானது காரைக்காலில் நடைபெற்றது.
காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நேரு நகரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிந்தது. இந்த பேரணியில் ஏராளமான பெண்கள் பங்கற்று இருந்தார்கள். அப்போது அதிகாரியை சந்திக்கவிடாமல் கேட்டிலேயே தடுத்தனர்.
அப்போதுன் ஒரு பாட்டி கொந்தளித்து பேசினார். “பதிஞ்சது பதிஞ்சதுதான் எங்கயா செய்யுற அங்க.. ஏழைங்க இங்க நாங்க தெருவுல நிக்கிறோம்.. நீ ஏசி ரூம் -ல இருக்கியா.. வெளிய வாய்யா.. நல்லா மீன் குழம்பு, கறிக்குழப்பு எல்லாம் தின்னுப்புட்டு, நல்லா ஏசியில உட்கார்ந்துட்டு பாருய்யா.. அரிசியும் கொடுக்கல, ஒரு எழவும் கொடுக்கல.. 100 நாள் வேலைக்கு போன வயசானவங்களுக்கு எல்லாம் வேலை இல்லை அப்படின்னு சொல்றாங்க.. அளந்து போடுற பையன் கேட்டுகுறாங்க..
100 நாள் வேலையில் கிழவிகளுக்கு என்ன வேலை என்று கேட்குறான்.. கண்ணு தெரியாத கிழவிக்கு இங்கு என்ன வேலைன்னு கேட்குறான்.. உங்களுக்கு வீணாக சம்பளம் கொடுக்கனுமா என்று கேட்கிறான்.. அப்படின்னா கண்ணு தெரியாத கிழவிக்கு எல்லாம் யாரு சாப்பாடு போடுவா.. நம்ம தானே போடனும் ஏழை தானே போடனும்.. நல்லா ஏசிய நாலு அஞ்சா போட்டுவிடு.. நீயும் போ..” என்று அந்த பாட்டி பேசினார்.

அதிகாரத்தில் உள்ளவரக்ளை நோக்கி பாட்டி கேட்ட ஒவ்வொன்றும் சரியான கேள்விகள் என்றும் வலிகளை வார்த்தைகளில் வெளிப்படும் நிச்சயம் அது வெடிக்கவே செய்யும் என்றும் நெட்டிசன்கள் கூறினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.