சர்ர்ரென உயரும் தக்காளி விலை.. சட்டென தீர்வு சொன்ன மத்திய அரசு.. என்னனு பாருங்க

டெல்லி:
தக்காளி, வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இதற்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தக்காளி, வெங்காயம் தான் எல்லாவிதமான சமையலுக்கும் அடிப்படை. எனவேதான், இந்த இரண்டு பொருட்களின் விலை உயர்ந்தால் அது நாடாளுமன்றத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். குறிப்பாக, வெங்காயத்தை விட மிக முக்கிய சமையல் பொருளான தக்காளியின் விலை உயர்வு நாட்டையே அதிரச் செய்துவிடும். இந்த இரண்டும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.100, ரூ.150, ரூ.180 என ஹார்ட் அட்டாக்கையே வரவழைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது ரூ.120-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது மாநிலங்களவையில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மத்திய உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 22 அத்தியாவசிய உணவுகளின் விலையை நாடு முழுவதும் நுகர்வோர் நலத்துறை கண்காணித்து வருகிறது. தற்போது தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ‘விலை ஸ்திரத்தன்மை நிதி’ திட்டத்தின் கீழ் தக்காளியை மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய வேளாண்மைக் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மூலமாக தக்காளி கொள்முதல் நடந்து வருகிறது.

“கலைஞர் உரிமைத் தொகையா”.. கலைஞருக்கு என்ன உரிமை இருக்கு.. உன் பரம்பரை காசா? சீமான் ஆவேசம்

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட தக்காளிடெல்லி, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நுகர்வோர் மையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல, வெங்கயாமும் பல லட்சம் டன்னுக்கு கொள்முதல் செய்து சேமித்து வைக்கப்படுகிறது.

பொதுவாக, வெங்காயத்தின் விலை உயரும் மாதங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இந்தக் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயங்கள் விநியோகிக்கப்படும். இது வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும். அதே சமயத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் தக்காளியின் விலை உயரும். ஆனால், வெங்காயத்தை போல தக்காளியை கொள்முதல் செய்து நீண்டகாலமாக வைக்க முடியாது. அத்துடன், பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. இதுதான் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

இதுபோன்ற நிலையில், தக்காளியை நீண்டகாலமாக இருப்பு வைப்பது எப்படி என்பது குறித்து யோசனை கூற “மிகப்பெரிய தக்காளி சவால்” (Tomato Grand Challenge) என்ற பெயரிலான கருத்து கேட்பு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில் கூறப்படும் நல்ல யோசனைகளை ஆய்வு செய்து தக்காளியை நீண்டகாலமாக இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.