புவனேஸ்வர்: பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.. இதையடுத்து, அந்த வீடியோக்களை கசிய விட்டதாக ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திக்கிறார்கள்.. என்ன நடந்தது?
ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், புவனேஸ்வரில் உள்ள லட்சுமிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், “நான் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்தேன்.. அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தபோதெல்லாம், வீடியோக்கள், போட்டோக்களை எடுத்து கொள்வார்.
உள்நோக்கம்: அப்போது அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.. அவரது உள்நோக்கமும் அறியவில்லை.. ஆனால், அவரை நான் முழுமையாக நம்பினேன்.. இதன்காரணமாக, அவருடன் நான் சினிமாவில் பணிபுரிந்ததற்கான பணத்தையும் எனக்கு அவர் தரவில்லை.. நானும் அதை வற்புறுத்தி கேட்கவில்லை.. நாளுக்கு நாள், எங்களின் உறவு மோசமாக ஆரம்பித்து. அவர் என்னை அசிங்கப்படுத்த துவங்கினார்.. சினிமா துறையில், என்னுடைய பெயரை கெடுக்கவும் செய்தார்.
இதையடுத்து, நாங்கள் ஒன்றாக சேர்ந்திருந்தபோது எடுத்த, அத்தனை அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் நடிகை கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் துவக்கி உள்ளனர்.
நடிகை வக்கீல்: எனினும், இந்த புகாருக்கு முன்னதாக, இதே ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது ஒடிசா ஹைகோர்ட்டில், இதே நடிகை பாலியல் புகார் புகார் தந்திருக்கிறார்.. இந்த வழக்கு தொடர்பாக நடிகையின் வக்கீல் சௌம்யஜித் பிஸ்வால் சில தகவல்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அதில், “பாதிக்கப்பட்ட நடிகையும், அந்த ஹாலிவுட் தயாரிப்பாளரும் கொஞ்ச நாள் ஒன்றாகவே திரைப்படங்களில் பணிபுரிந்தனர்.. இதன் பிறகு 2 பேரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பரிமாறி கொண்டனர். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. ஆனாலும் நடிகை, மற்ற தயாரிப்பாளர்களுடன் பணி செய்ய முயன்றார்..

ஹாலிட் தயாரிப்பாளர்: இது அந்த ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அதனால், மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் பணியாற்ற வேண்டும் என்றும், தன்னுடைய தயாரிப்பில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.. இதற்கு நடிகை ஒப்புக்கொள்ளவில்லை.. இதனால், அந்த தயாரிப்பாளர், நடிகை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த சித்ரவதை 2 வருட காலமாகவே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் வழக்கு விசாரணை நடக்கிறது” என்றார்.
பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ, போட்டோக்கள் வெளியான சம்பவம் ஒடிசா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், அந்த நடிகையின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.