கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெப்பல் மேம்பாலம் அருகே வானில் ஓர் அதிசயம் தென்பட்டுள்ளது. இது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வைரலாகி வருகிறது. வழக்கம் போல் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் திடீரென வானில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளனர். இதை பார்ப்பதற்கு இருண்ட வானில் கதவு ஒன்று இருப்பது போல் தோன்றியது.
பெங்களூரு ஹெப்பல் பாலம்
இதனை பின்னால் லேசாக வெளியே வந்த வெளிச்சத்தால் பார்க்க முடிந்தது. வானில் எப்படி கதவு தெரியும்? மேகக் கூட்டங்கள் தானே இருக்கும்? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வாசீம் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மர்மமான ஒரு நிழல்.
இதுதான் வரலாறு காணாதது… 24மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த 60 செ.மீ மழை… நாளையும் விடுமுறை அறிவிப்பு!
இரவு நேர வானியல் நிகழ்வு
அதுவும் பெங்களூரு நகரின் இரவு நேரத்தில் தென்பட்டுள்ளது. இதை யாராவது கவனித்தீர்களா? இது என்னவாக இருக்கும்? ஏதேனும் கட்டிடத்தின் நிழலா? அப்படி இருந்தால் அதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? எனப் பதிவிட்டிருந்தார். இது பெரிதும் வைரலாகி வருகிறது. இந்த நிழல் போன்ற காட்சிக்கு பலவிதமான யூகங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
நிழல் எப்படி தோன்றியது?
அது பெரிய கதவு கிடையாது. செல்போன் மாதிரி இருக்கிறது எனச் சிலர் பதிவிட்டுள்ளனர். வேறு சிலரோ ஒரு படி மேலே சென்று இதுதான்பா சொர்க்கத்திற்கு போற கதவு. இல்லை நகரத்திற்கு போற வழி என்றெல்லாம் கதை கட்டி விட்டனர். இப்படி ஒருவர் பின்னால் ஒருவர் கருத்துகளை பதிவிட்டு வந்த சூழலில், சிலர் இதுபோல் ஒரு நிழலை வேறு சில நாடுகளிலும் பார்த்திருப்பதாக கூறி பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளனர்.
பெங்களூருவில் மட்டுமல்ல
அதாவது, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா, சீனா ஆகிய நாடுகளில் 2017ஆம் ஆண்டில் தென்பட்டதாக சமூக வலைதளங்கள் வாயிலாக கூறுகின்றனர். அறிவியல் பூர்வமாக பார்க்கையில், இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusion) என்கின்றனர். மழைக் காலங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் மேகக் கூட்டங்கள் கீழ் நோக்கி நகரும்.
வானியல் ஆய்வாளர்கள் கருத்து
இதன் பின்புறம் ஒளிப் பாய்ச்சப்படும் போது இப்படியான காட்சிகள் தென்படும் என்று கூறுகின்றனர். வானில் ஒளிந்திருக்கும் அதிசயங்களுக்கு நம்மால் விடை சொல்வது கடினம். வானியல் ஆய்வாளர்களால் சரியாக கணித்து சொல்ல முடியும் என்கின்றனர். ஆனால் இதுவரை வானியல் துறையில் இருந்து யாரும் கருத்து கூறியதாக தகவல்கள் வெளியாகவில்லை.