மகானை தொடர்ந்து 'துருவ நட்சத்திரம்' படத்திலும் அதே காரியத்தை செய்த விக்ரம்: ரசிகர்கள் ஷாக்.!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் இப்போ வந்துரும். சீக்கிரம் வந்துரும் என செய்திகள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் படம் வந்த மாதிரி தெரியவில்லை. இந்தப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்து வருகின்றனர். இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படம் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டே துவங்கப்பட்ட படம் தான் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம், கெளதம் மேனன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பும் படமாக உருவாகியது இந்தப்படம். 2018 ஆம் ஆண்டே ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் இந்தப்படத்தின் ஸ்டைலிஷான டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேகளாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதனிடையில் இந்தப்படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் தூக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து ஏற்கனவே வெளியான ‘மனம்’ பாடல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளை நீக்கி விட்டு விக்ரம், ரிது வர்மா இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளை இடம்பெற செய்துள்ளனர். இதன்மூலம் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமாக காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

D51: ‘தனுஷ் 51’ படம் குறித்த அதிரடி அறிவிப்பு: பான் இந்தியா அளவில் மிரட்டலான சம்பவம்.!

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான ‘மகான்’ படத்திலிருந்து வாணி போஜன் சம்பந்தமான காட்சிகள் நீக்கப்பட்டது. அதன்பின்னர் வாணி போஜன் சம்பந்தமான காட்சிகள் யூடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இதனை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றை கூறும் விதமாக பா. ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

DD Returns: சந்தானம் இஸ் பேக்.. காமெடி சரவெடி: ‘டிடி ரிட்டன்ஸ்’ ட்விட்டர் விமர்சனம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.