ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். மேலும், இந்த ஆடியோ லான்ச்சிற்காக மாலத்தீவில் இருந்து நேற்றைய தினம் சென்னை திரும்பினார் ரஜினி. இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முழு உற்சாகத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவை நடிகர் கவின், விஜே ரம்யா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு ரஜினி வருகை கொடுத்ததும் ‘தலைவர் தலைவர்’ என ஆரவாரம் செய்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்களுக்கு பெரிய வணக்கம் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார், அனிருத் ரவிச்சந்தர் இருவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘ஜெயிலர்’ படத்துக்காக அப்பா மகனுக்கான பாட்டு எழுதி இருக்கேன். இந்த படமும் அப்பா மகனுக்கான கதை என தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அனிருத் பற்றி பேசிய விக்கி, தலைவருக்காக பாட்டு பண்றப்ப வேறலெவல் உழைப்பு போடுறாரு அனிருத். ரஜினி சார் உங்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யான்னு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. உங்களுக்கு ஒரு பையன் இருந்திருந்தா அனிருத்தை பார்த்து பொறாமைப்பட்டு இருப்பாரு. உங்க மேல அந்தளவுக்கு அன்பு, மரியாதை வைச்சு இருக்காரு என பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். அவரின் இந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.
சூப்பர் ஸ்டாரின் மாஸ் என்ட்ரி.. அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்: ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் அப்டேட்.!
இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘ஜெயிலர்’ படத்துக்காக ‘ரத்தமாரே’ என்ற பாடலை எழுதியுள்ளார். அப்பா, மகன் பாசத்தை மையப்படுத்தி விக்கி எழுதியுள்ள இந்தப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்திலிருந்து காவாலா, ஹுக்கும், ஜுஜுபி பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது படத்தின் முழு ஆல்பமும் வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், மிர்னா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளார்கள். பான் இந்தியா அளவில் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பாராட்டி பேசிய சந்தானம்: என்ன சொல்லிருக்காரு தெரியுமா.?