கடற்படையின் ஆதரவில் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சி

கடற்படையின் ஆதரவில் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக பாடசாலை மாணவர்களுக்காக பியகம, தரணகம ஆரம்பப் பிரிவு வித்தியாலயத்தில் பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சி கடற்படைப் பணிப்பாளர் கொமாண்டர் நந்தனி விஜேதோருவின் மேற்பார்வையில் ( 27) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அதற்கிணங்க, கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டம் கடற்படையின் ஆறு பல் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இம்முகாமில் 200 மாணவர்களுக்கு தமது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்காக ஆரோக்கியமாக வாய்ச் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் பற்சிகிச்சையும் அவ்விடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா உட்பட பல அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.a

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.