சென்னை: கடந்த 2018ம் ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியானது கோலமாவு கோகிலா படம். படத்தில் யோகிபாபு, நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோலமாவு கோகிலா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
நகைச்சுவையாக எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்தே சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் இயக்கி வெற்றிப்படமாக்கினார் நெல்சன்.
விரைவில் கோலமாவு கோகிலா 2 உருவாகவுள்ளதாக யோகிபாபு உறுதி: இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் அறிமுக முயற்சியாக கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது கோலமாவு கோகிலா. அறிமுகப்படத்திலேயே நயன்தாராவை இயக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார் நெல்சன். படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஜேக்லின் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய அம்மாவிற்காக போதை பொருள் கடத்தலில் நயன்தாரா ஈடுபடுவதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
நயன்தாராவை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபு சிறப்பாக நடித்திருந்தார். காமெடியை மையமாக கொண்டு வெளியான கோலமாவு கோகிலா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தே சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு அமைந்தது. தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
கதாநாயகியை மையமாக வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். நுரையீரல் புற்றால் பாதிக்கப்பட்ட அம்மா, படித்துக் கொண்டிருக்கும் தங்கை, சம்பாதிக்க முடியாத அப்பா என தன்னுடைய தோள்களில் குடும்ப பாரத்தை சுமக்கும் கோகிலா, நெருக்கடியால் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதை கதைக்களமாக படத்தில் கொண்டிருந்தார் நெல்சன். போதை பொருள் கடத்தலை மையமாக கொண்ட கதைக்களத்தில் நாயகியை மையப்படுத்தியது இந்தப் படத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது.
இந்தப் படத்தில் யோகிபாபுவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது. தெரியாமல் போய், கோகிலாவின் கடத்தலில் மாட்டிக் கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள் படத்திற்கு பலம். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா 2 படம் விரைவில் உருவாகவுள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த முயற்சியாக நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை கையில் எடுப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். வித்தியாசமான முயற்சியாக, காமெடியுடன் சீரியசான விஷயத்தை கோலமாவு கோகிலா படத்தில் கையில் எடுத்திருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து யோகிபாபு உறுதி செய்துள்ளார்.