Vishal: மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்: வைரலாகும் போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ‘மார்க் ஆண்டனி’ என்ற படம் உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித்தியாசமான திரைக்கதையுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் கடைசியாக ‘லத்தி’ என்ற படம் வெளியாகியிருந்தது. ஆக்ஷன் ஜானரில் உருவான இந்தப்படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்திருந்தார் விஷால். ஆனால் இந்தப்படம் ரசிகர்கள் மத்தில் பெரிதான வரவேற்பினை பெறவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து தற்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்தப்படத்தில் நடிகர் விஷால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், ரிது வர்மா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். டைம் டிராவலை மையமாக வைத்து வித்தியாசமான திரைக்கதை அம்சத்துடன் இந்தப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களாக உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா இருவரும் வித்தியாசமான கெட்டப்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது: பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பதிவு.!

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நாய் தன்னிடம் வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் நடிகர் விஷால்.

இது சம்பந்தமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ‘ஹேப்பி பர்த்டே மை சன்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மார்க் ஆண்டனி’ படத்தினை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஷால் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo:பயங்கரம்.. வெறித்தனமான லுக்கில் சஞ்சய் தத்: மிரட்டலாய் வெளியான ‘லியோ’ கிளிம்ப்ஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.