ஆகஸ்ட் 1 முதல் எகிறும் விலை… வருகிறது தடை… ஆட்டம் காணப் போகும் பெங்களூரு!

ஒவ்வொரு மாதமும் புதுப்புது அப்டேட்கள் வருவது வாடிக்கையாகி விட்டது. இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுவதால் அதற்கேற்ப தயாராக வேண்டியுள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் கர்நாடகா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சில மாற்றங்கள் வரப் போகின்றன. அதுவும் இரண்டு விஷயங்கள். குறிப்பாக பெங்களூரு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.

நந்தினி பால் விலை உயர்வுமுதல் விஷயம் நந்தினி பால். சமீபத்தில் கூட குஜராத் மாநிலத்தின் அமுல் vs கர்நாடகா மாநிலத்தின் நந்தினி ஆகிய பால் பிராண்ட்களுக்கு இடையில் நடந்த மோதலை பலரும் அறிந்திருப்பர். தற்போது சலசலப்புகள் அடங்கி நந்தினியின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நந்தினி பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அளவிற்கு உயரப் போகிறதாம். நீல நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 39 ரூபாயில் இருந்து 42ஆக அதிகரிக்கிறது.​நஷ்டத்தை சமாளிக்க முடிவுஇதனுடன் தயிர் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து 47 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. இதன் பின்னணி காரணம் என்னவென்று பலருக்கு கேள்வி எழலாம். அதாவது, தற்போது நிலவும் கடும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடகா பால் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு பால் முகவர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
முதலமைச்சர் சித்தராமையா அறிவுறுத்தல்இதுதொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் இறுதியில் 3 ரூபாய் மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் லாப நோக்கத்திற்காக பால் பொருட்களை விற்பனை செய்யவில்லை. இது மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள். எனவே நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் அவசியம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாட்டு தீவின விலையேற்றம்இதுதொடர்பாக பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜன்னா, விலை உயர்வை தவிர்க்கவே முடியாது. நஷ்டத்தை தவிர்க்க இது ஒன்று தான் சரியான வழியாக இருக்கிறது. மாட்டு தீவனங்கள் விலை ஏற்றத்தையும் அறிந்திருப்பீர். எனவே 3 ரூபாய் விலை உயர்விற்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த தொகை முழுவதுமாக விவசாயிகளின் கைகளுக்கு கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
​பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வேஇரண்டாவது விஷயம் பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ட்ராக்டர்கள், அனைத்து மோட்டார் அல்லாத வாகனங்கள், மல்டி ஆக்சில் ஹைட்ராலிக் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை முதன்மை சாலையை விட்டு விட்டு அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.
​குறைந்த வேகம் கொண்ட வாகனங்கள்இதுதொடர்பாக அறிவிப்பு பலகைகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை 118 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் கணக்கில் எடுத்துக் கொண்டால் 296 விபத்துகள் நடந்துள்ளன. இதன்மூலம் 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு குறைவான வேகத்தில் இயக்கக்கூடிய வாகனங்களை எக்ஸ்பிரஸ்வே சாலையில் அனுமதித்ததே என்று நெடுஞ்சாலைத் துறை கண்டறிந்துள்ளது.
​ஆகஸ்ட் 1 முதல் அமல்அதாவது 100 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கக் கூடியவை. மற்றவை அதிக வேகத்தில் செல்வதால் குறைவான வேகத்தில் செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்துகளை சந்திக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்களும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.