போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசங்கள் குற்றம் செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. அந்த வகையில் தான் தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து உடலை கடித்துவைத்து கொடூரமான முறையில் சித்ரவதை செய்த துன்புறுத்திய 2 பேர் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டம் மைஹர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். அதேபகுதியை சேர்ந்தவர் அதுல் படோலியா. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பிரபல கோவிலின் அறக்கட்டளையில் பணியாற்றி வருகிறார். ஒரே ஊரில் பிறந்து ஒரே இடத்தில் பணி செய்து வருவதால் இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் ரவீந்திர குமார், அதுல் படோலியா ஆகியோர் 12 வயது சிறுமியை ஏமாற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை தாக்கி, உடலை கடித்துவைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பிறப்புறப்பில் மர்மபொருளை திணித்து அவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர். சித்ரவதை செய்துள்ளனர். அதோடு சம்பவம் குறித்து வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி சென்றுள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திர குமார், அதுல் படோலியா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரோவா பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல்சிகிச்சைக்காக அந்த சிறுமி போபால் அல்லது டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.
இதுபற்றி சாட்னா போலீஸ் சூப்பிரண்டு அசுடோஸ் குப்தா கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்பிறப்பில் கம்பு அல்லது வேறு பொருளை திணித்து சித்ரவதை செய்துள்ளனர் என்பதை நான் மறுக்கவில்லை. இருப்பினும் மருத்துவ அறிக்கை வந்த பிறகு தான் அதனை உறுதியாக கூற முடியும்” என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரவீந்திர குமார், அதுல் படோலியா ஆகியோரை அவர்கள் பணி செய்த அறக்கட்டளை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
மேலும் சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமை பற்றிய தகவல் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகம் அவர்கள் 2 பேரின் வீடுகள் குறித்து விசாரித்தது. அப்போது ரவீந்திர குமாரின் வீடு எந்தவித அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதும், அதுல் படோலியாவின் வீடு அரசு நிலத்தில் கட்டியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரின் வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.
அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது ரவீந்திர குமார், அதுல் படோலியா ஆகியோரின் குடும்பத்தினர் வீடுகளை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளை கையெடுத்து கும்பிட்டனர். இருப்பினும் விதிகளை மீறி வீடுகள் கட்டியிருப்பதாக கூறி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.