
டபுள் ஐ ஸ்மார்ட் படத்தில் இணைந்த சஞ்சய் தத்
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐ ஸ்மார்ட் ஷங்கர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளனர். இதற்கு டபுள் ஐ ஸ்மார்ட் என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. புரி ஜெகநாத் மற்றும் சார்மி இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .
இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி இருவரும் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகி உள்ளார். சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இதன் அறிவிப்பை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் இவர் வில்லனாக நடிக்க உள்ளார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சஞ்சய் தத் ‛கேஜிஎப் 2' படத்திற்கு பின் தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்கிறார். தமிழில் விஜய் உடன் லியோ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.