சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்பி சூப்பர்ஸ்டார் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாலும், அங்க ரிட்டயர்ட் ஆகிட்டு இங்கே வரியா என முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி தமிழ் சினிமா அவர்கள் ஆள் மனதில் இருந்த சினிமா ஆசையையே வேறோடு பிடுங்கிப் போட்டு விடுகிறது.
சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 வருடங்களுக்கு மேல் விளையாடி உள்ளோம். இங்கே படத்தை ரிலீஸ் செய்தால், பிச்சிக்கிட்டு போகும் என நினைத்து களமிறங்கினார்.
ஆனால், அவரது முதல் தயாரிப்பு படமான எல்ஜிஎம் திரைப்படம் நினைத்த அளவுக்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தோனிக்கு மட்டுமின்றி கோலிவுட்டை நம்பி வந்த பல கிரிக்கெட் வீரர்களுக்கும் இங்கே பெரிய அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அப்படி எந்த எந்த கிரிக்கெட் பிரபலங்கள் தமிழ் சினிமாவை நம்பி வந்து மொக்கை வாங்கினார்கள் என்கிற டாப் 5 லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம் வாங்க..

சடகோபன் ரமேஷ் – போட்டா போட்டி: 2011ம் ஆண்டு வெளியான போட்டா போட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ். யுவராஜ் தயாளன் இயக்கிய அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
அங்கிருந்து கட் பண்ணா அடுத்ததாக ஜெயம் ரவிக்கு அண்ணனாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார் சடகோபன் ரமேஷ். அதன் பின்னர் விஷாலின் மதகஜ ராஜா படத்தில் அவர் நடித்திருந்தாலும், அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லை.

ஹர்பஜன் சிங் – பிரண்ட்ஷிப்: நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன் என கிரிக்கெட்டில் ரிட்டயரான பின்னர் கோலிவுட் பக்கம் ஒதுங்கிய ஹர்பஜன் சிங் கடந்த 2021ம் ஆண்டு பிக் பாஸ் லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என பெரிய பட்டாளத்துடன் களமிறங்கினார்.
இரட்டை இயக்குநர்களான சாம் சூர்யா மற்றும் ஜான் பால் ராஜ் இயக்கிய அந்த படம் ஃபிளாப் ஆன நிலையில், அடுத்து நடிக்கிற ஆசையையே விட்டு விட்டார் ஹர்பஜன் சிங்.

இர்ஃபான் பதான் – கோப்ரா: சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் மிரட்டலான இன்டர்போல் அதிகாரியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இர்ஃபான் பதான். அவர் போட்ட கெஸ் எல்லாமே கரெக்ட்டாகவே இருந்தது. நல்லா கஷ்டப்பட்டும் நடித்திருந்தார்.
ஆனால், டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என டெரரான படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்துவின் ஸ்க்ரீன் பிளே கொஞ்சம் சொதப்பியதால் அந்த படம் ஹிட் அடிக்க தவறியது. அத்துடன் இர்ஃபான் பதானும் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

ஸ்ரீசாந்த் – காத்துவாக்குல ரெண்டு காதல்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவின் காதலராக நடித்திருந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
அந்த படம் ஓரளவுக்கு ஹிட் அடித்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பெரிய ஸ்கோப் இல்லாத நிலையில், அவரும் அடுத்து சினிமாவில் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தல தோனி – எல்ஜிஎம்: கடைசியாகத் தான் இந்த லிஸ்ட்டில் வந்து சேர்ந்தார் தல தோனி. ஆனால், இந்த முறை இவர் படத்தில் நடிக்கவில்லை. தோனி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் வெளியான எல்ஜிஎம் படத்தை நல்ல பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
ஆனால், ஹெலிகாப்டர் சிக்ஸர் போல படம் ஹிட் அடிக்காமல், தோனியை சிங்கிள்ஸ் ஆட வைத்து விட்டது. இந்த படத்துக்கு பிறகு தோனி படம் தயாரிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.