விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் இப்படத்திலிருந்து நா ரெடி தான் என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. என்னதான் இப்பாடல் சில பல சர்ச்சைகளை கிளம்பினாலும் ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இப்பாடல் அமைந்தது.
ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்
இதையடுத்து சமீபத்தில் இப்படத்தில் முக முக்கியமான ரோலில் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஆண்டனி தாஸ் என்ற மிரட்டலான ரோலில் லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். அவரின் கெட்டப் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
Jailer audio launch: ஜெயிலர் படத்தில் என் நண்பரை தான் வில்லனாக நடிக்க கேட்டோம்..ஆனால் ? ரஜினி சொன்ன அந்த நண்பர் இவரா ?
மேலும் நேற்று வெளியான இந்த கிலிம்ஸ் வீடியோவை ரசிகர்கள் ஆராய்ந்து டீகோட் செய்து வருகின்றனர்.தற்போது இந்த கிலிம்ஸ் வீடியோ யூடியூபில் வழக்கம் போல பல சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் லியோ படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க படத்தின் தயாரிப்பாளரான லலித் சொன்ன ஒரு தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று ஒரு விழாவில் பங்கேற்ற லலித்திடம் லியோ படத்தை பற்றியும், அதன் அடுத்த அப்டேட் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லலித், லியோ படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவரின் கிலிம்ஸ் வீடியோ தான் வெளியாகும் என கணித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்
இதைப்போல தான் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாடிய நா ரெடி தான் என்ற பாடல் வெளியானது. அதைத்தொடர்ந்து சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கிலிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அடுத்ததாக அர்ஜுனின் பிறந்தநாளன்று அவரின் கிலிம்ஸ் வீடியோ வெளியிடப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். விரைவில் சென்னை திரும்பி லியோ படத்தின் டப்பிங் பணிகளை தளபதி துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.