பெஷாவர்,-பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத் தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 39 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நான்காவது பெரிய மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பஜவுர் மாவட்டம் உள்ளது.
இங்குள்ள கார் டெசில் பகுதியில், ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது.
அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், ஆதரவாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது.
பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. கூட்டத்திற்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதில், 39 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இவர்கள் பஜவுர், பெஷாவர், டைமர்கெரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
ஜே.யு.ஐ.எப்., கட்சி யின் முக்கிய பிரமுகர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை யில் தற்கொலை படை தாக்குதலால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தெரிய வந்து உள்ளது. இந்த தாக்குத லுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஜே.யு.ஐ.எப்., கட்சியினர் வலியுறுத்திஉள்ளனர்.
கடந்த 2021ல் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல், பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.
தற்போது தாக்குதல் நடந்துள்ள கைபர் பக்துன்குவா மாவட்டம் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்