மனித குளத்துக்கு பெரும் அச்சுறுத்தல்… மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி!

மூளை தின்னும் அமீபாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் நெவாடா பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளை தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் மூளை தின்னும் அமீபா என குறிப்பிடப்படும் Naegleria fowleri தொற்றால் அவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

யாரு காதுல பூ சுத்துறீங்க… மக்கள் என்ன முட்டாளா? பாஜகவை சரமாரியாக சாடிய காயத்ரி ரகுராம்!

அமெரிக்காவில் மூளை தின்னும் அமீபாவுக்கு பலியாகும் மூன்றாவது நபர் இவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தை நபரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அந்த இளைஞர் ஏரி அல்லது குளம் போன்ற ஃபிரஷ் தண்ணீர் உள்ள நீர் நிலைகளில் குளித்ததன் மூலம், அவருக்கு அந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என ஜார்ஜியா பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூக்கின்ன வழியாக உடலுக்குள் செல்லும் இந்த அமீபா மூளையில் தொற்றை ஏற்படுத்தி செயலிழக்க செய்துவிடும். மூளை செல்கள் செயலிழப்பை தொடர்ந்து, கோமா நிலையை ஏற்படுத்தும் இந்த அமீபா மிக குறைவான நாட்களில் மரணத்தை கொடுத்து விடுகிறது.

இந்த அமீபா தொற்றால் கடுமையான முன் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து வலி, வலிப்பு மற்றும் கோமா ஆகியவை அமீபாவால் ஏற்படும் சில அறிகுறிகளாகும். நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒன்று முதல் 12 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இந்த மாதிரி தக்காளி விற்பனை செய்யுங்க… தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ ஐடியா!

வட அமெரிக்கா பகுதியில் இந்த அமீபா தொற்று உள்ளதாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவின் வட மாநிலங்களில் இந்த அரிய வகை அமீபா பரவி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 1962 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜியாவில் இந்த மூளை தின்னும் அமீபாவால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.