டில்லி அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறையா; சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையிலிருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் […]
