ஓசூர் டூ பெங்களூரு ஏசி மெட்ரோ… கவுன்ட்டவுன் ஸ்டார்ட்… தென்னிந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட்!

ஓசூரில் இருந்து பெங்களூரு நகருக்கு மெட்ரோ ரயிலில் குளுகுளு ஏசியில் பயணம் செய்ய ரெடியா? இந்த கேள்வி தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஹைலைட். தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் தினசரி எல்லைகளை கடந்து சென்று திரும்புபவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பேருந்துகளில் கூட்ட நெரிசல்களில் சிக்கி தவிக்க வேண்டியதில்லை. மெட்ரோ ரயில் மூலம் விரைவாகவும், சொகுசாகவும் பயணிக்க முடியும்.

​தமிழகம் டூ கர்நாடகா மெட்ரோஇந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை கிடுகிடுவென வளர்ச்சி அடைய செய்யவும் மெட்ரோ ரயில் வழிவகுக்கும். இதுமட்டும் சாத்தியமானால் தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையிலான முதல் மெட்ரோ என்ற சிறப்பை பெற்றுவிடும். ஏனெனில் டெல்லி மெட்ரோ ரயில் சேவை உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.​ஓசூர் டூ பொம்மசந்திரா மெட்ரோ சேவைஓசூர் டூ பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைக்கு நடப்பாண்டின் தொடக்கத்தில் தான் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை அனுமதி அளித்தது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஓசூரில் இருந்து பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா வரை 20.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைத்து மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 20.5 கி.மீ தூரம்இதில் 12 கிலோமீட்டர் தூரம் கர்நாடகாவிலும், 8.5 கிலோமீட்டர் தூரம் தமிழகத்திலும் வருகிறது. முன்னதாக பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை மஞ்சள் லைனில் வழித்தடம் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
​பெங்களூரு கனெக்‌ஷன்இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் ஓசூர் நகருடன் பெங்களூருவை இணைப்பது எளிதாகி விடும். ஏனெனில் மஞ்சள் லைன் மெட்ரோ ஆனது பச்சை மற்றும் சிவப்பு வழித்தட மெட்ரோ உடன் இணைக்கிறது. இவை பர்பிள் வழித்தட மெட்ரோ உடன் இணைக்கின்றன. மேலும் மஞ்சள் வழித்தட மெட்ரோ உடன் நீல நிற வழித்தடமும் இணைக்கப்பட உள்ளது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு பயணிக்க செய்துவிடும்.
அடுத்தகட்ட வளர்ச்சிஇந்நிலையில் தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) மேற்கொண்டு வருகிறது. தொழில் நகரான ஓசூரையும், ஐடி நகரான பெங்களூருவும் மெட்ரோ ரயில் மூலம் இணைப்பது வர்த்தக ரீதியில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​டெண்டர் கோரப்பட்டதுமேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய டெண்டர் விடப்படவுள்ளது. இதன்மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்த வழியாக பாதை அமைக்கலாம். எங்கெல்லாம் ரயில் நிலையங்கள் கொண்டு வரலாம். எவ்வளவு செலவாகும். மெட்ரோ, மெட்ரோ லைட், மோனோ ரயில் ஆகியவற்றில் எது சரியாக இருக்கும் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.