'சமூக வலைதள எதிர்ப்புக் குரல்கள் இனி..'- குறையும் தமிழக IAS அதிகாரிகள்-இளையராஜா 'பயோபிக்'கில் தனுஷ்!

‘சமூக வலைதள எதிர்ப்புக் குரல்கள் இனி…’

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்

சின்ன தலைவியின் அண்ணன் மகன்களில் ஒருவரான விவேகமானவர், சமீபத்தில் கார் விபத்துக்கு ஆளானாராம். அவர் மயிரிழையில் உயிர் தப்பிய நிகழ்வு, சின்ன தலைவியை ரொம்பவே அச்சப்படுத்திவிட்டதாம்.

கார் விபத்துக்குள்ளாகிக் கிடந்த புகைப்படங்களைப் பார்த்து மேலும் அதிர்ந்துபோனவர், சில கோயில்களுக்கு விவேகமானவரை அழைத்துப்போய் பரிகார பூஜைகளையும் பண்ணவைத்தாராம்.

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல சீக்ரெட் தகவல்கள்…

* காக்கி மாஜியின் ஹேப்பி!

* சமூக வலைதள எதிர்ப்புக் குரல்கள்… அடக்க உத்தரவு!

* சொல்லிக்கொடுக்கும் துறையின் அமைச்சரால் புலம்பும் சீனியர் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள்

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

“பரவனாற்றை திசை மாற்றுவது ஏன்?” – NLC கூறும் விளக்கம்…

என்.எல்.சி | விவசாயப் பயிர்கள்

நிலக்கரி எடுப்பதற்கு போதுமான நிலம் இல்லை என்றும், அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தப் போகிறோம் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.

அதையடுத்து இரண்டாவது சுரங்க விரிவாகத்திற்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை பகுதிகளில் கடந்த 2006 – 2013 காலகட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் கடந்த ஜூலை 26-ம் தேதி பணியை துவங்கியது என்.எல்.சி நிர்வாகம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘எக்ஸ்ட்ரா அமௌன்ட்’ – இன்டர்நெட்டில்  ரூ.24 லட்சத்தை இழந்த பெண்!

கடன் செயலிகள் நீக்கம்…

குறைந்த முதலீடு செய்து டாஸ்க்குகளை முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, இணைய வழியில் பெண்ணிடமிருந்து 24,80,847 ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை, விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த மாதம் 25-ம் தேதி, இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

குறையும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்! – காரணம் என்ன?

ஐ.ஏ.எஸ்

“குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்துவருகிறது.

இத்தனைக்கும் இந்தியாவிலேயே அதிக அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களைக்கொண்ட மாநிலமாக, தமிழ்நாடு இருக்கிறது. எனவே, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சியடைய தமிழ் மாணவர்கள் திணறுகிறார்களா அல்லது திட்டமிட்டு விலக்கப்படுகிறார்களா..?

இது குறித்து இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஓலா ஊழியராக சாலையோர நாய்!’  

பிஜிலி

லா எலெக்ட்ரிக்கின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ள ஒரு நபர்.

தன் தொழில் தொடர்பான போஸ்ட்டுகள் மட்டுமல்லாது தான் பார்க்கும் பல்வேறு விஷயங்களையும், தன் அலுவலகச் சூழல்களையும், தன் நாளின் சில முக்கிய தருணங்களையும் அவ்வபோது புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிரெடிட் கார்டுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டு

ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டு (HDFC Bank Infinia Credit Card) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

அமெரிக்க அதிபர் தேர்தல்: ரேஸில் 3 இந்திய வம்சாவளிகள்…

இந்திய வம்சாவளிகள்

மெரிக்க அதிபர் தேர்தல் 2024 நவம்பர் 5-ம் தேதி, நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்தான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மூன்று இந்திய – அமெரிக்க வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றனர்.

குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அவர்மீது இருக்கும் வழக்குகள், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

தாய்ப்பாலால் தாய், சேய்க்குத் தவிர்க்கப்படும் நோய்கள்!

தாய்ப்பால்

ந்தியாவில் போதுமான அளவு தாய்ப்பால் குழந்தைகளைச் சென்றடைவதில்லை. இதனால், தவிர்க்க முடிகிற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் இறக்கின்றனர்.

குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்றவற்றால் அதிக இழப்புகள் நிகழ்ந்துள்ளன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘இளையராஜா பயோபிக்!’ – ராஜாவாக நடிக்கும் தனுஷ்!

தனுஷ் இளையராஜாவுடன்

`இளையராஜாவின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்குவது என் கனவு!’ என பாலிவுட் இயக்குநர் பால்கி அறிவித்திருக்கிறார்.

தன் கதாபாத்திரத்தை தனுஷ் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என ராஜா நம்புகிறார்.

இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை, எவ்வளவு தூரம் படமாக்கும் விஷயம் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றி இளையராஜாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரிப்பைத் தொடங்கி நடத்தினோம். கிடைத்த நம்பகமான செய்திகள் இதோ….

படிக்க இங்கே க்ளிக் செய்க…

————–

ரூ.252 கோடி கடன் நெருக்கடி; பாலிவுட்டின் பிரபல கலை இயக்குநர் நிதின் தேசாய் தூக்கிட்டுத் தற்கொலை!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.