சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது. கங்குவா படத்துக்கு முன்னதாக சூர்யா நடிப்பில் கடந்தாண்டு எதற்கும் துணிந்தவன் வெளியானது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது சூர்யா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
