அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை..? "பட்டா போட்டு கொடுத்துருக்கா".. எகிறிய சீமான்

சென்னை: “அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பநிதிக்கு என்ன வேலை இருக்கிறது? அவர் எதற்காக அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தொடங்கிய நாள் முதலாகவே அடுத்தடுத்து சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வது சீமானின் வழக்கமாக இருந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை போர் சமயத்தில் தான் பார்த்ததாகவும், அப்போது அங்கு ஆயுதப் பயிற்சியை எடுத்ததோடு, பிரபாகரனே தனக்கு ஆமைக்கறி பரிமாறியதாகவும் சொல்லி வந்தார் சீமான். பின்னர் அதை வைத்தே அவரை பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர். அதிலிருந்து, சீமான் அந்த பேச்சை எடுப்பதில்லை.

அதன் பின்னர், சாதிகளை தூக்கிப்பிடித்து பேசுவது; இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் அந்நிய மதங்கள் எனக் கூறுவது என பாஜகவின் “தமிழ் குரலாக” பேசத் தொடங்கினார் சீமான். இதனால் நாம் தமிழர் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ எனவும் விமர்சிக்கப்படுவதும் உண்டு. இந்நிலையில், சிறிது நாட்களாக அதுபோல் பேசுவதை நிறுத்திய சீமான், தற்போது மீண்டும் அதை தொடங்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறி பெரும் சர்சசையில் மாட்டியுள்ளார் சீமான். இதற்கு பல அரசியல் கட்சிகளும், முஸ்லிம் – கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான், “நான் அனைத்து கிறிஸ்தவர் – இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறவில்லை; திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் ஆதரவு அளித்து வருவோரை தான் அவ்வாறு கூறினேன்” என்றார்.

தொடர்ந்து திமுகவையும், காங்கிரஸையும் விமர்சித்து வந்த சீமான், அண்மையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் உதயநிதியின் மகன் உதயநிதி கலந்துகொண்டதை பற்றி ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:

ஸ்டாலின் முதலமைச்சர்.. உதயநிதி ஒரு துறையின் அமைச்சர். அவர்கள் ஒரு அரசு விழாவில் கலந்துகொள்கிறார்கள். அது பிரச்சினை இல்லை. யார் அந்த இன்பநிதி? அவர் எதற்கு அரசு விழாவில் கலந்துகொள்கிறார். இன்பதிநிதிக்கு அரசு விழாவில் என்ன வேலை? எத்தனை தலைமுறை தலைமுறையாக நீங்கள் எங்க மண்ணை ஆண்டுட்டு இருப்பீங்க? தமிழ்நாட்டை என்ன உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கோமா? என் இன மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா? என சீமான் கேள்வியெழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.