சாலையோரம் இறந்து கிடந்த கமல் பட நடிகர்: கடனால் தற்கொலை செய்த தேசிய விருது வென்ற பிரபலம்

உலக நாயகன் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலுக்கு நண்பராக நடித்தவர் மோகன். அந்த படம் தவிர்த்து அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு, நான் கடவுள் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மோகன்(60) சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருப்பரங்குன்றத்திற்கு சென்றார். அங்கும் வேலை கிடைக்காததால் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜூலை 31ம் தேதி பெரிய ரத வீதியில் ஒருவர் யாருமில்லாமல் இறந்து கிடந்தார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தார்கள்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விசாரணையில் ஆதரவில்லாமல் இறந்து கிடந்தவர் துணை நடிகர் மோகன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மேட்டூரில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மோகனின் உடல் மேட்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

3 சகோதரிகள், 2 சகோதரர்கள் இருந்தும் மோகன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததுடன் சாலையில் இறந்து கிடந்தது சினிமா ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. மோகன் போன்று இன்னும் எத்தனை நடிகர்கள் வேலை இல்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார்கள்.

Taapsee: டாப்ஸி இப்படியொரு பிசினஸ் பண்றார்னு உங்களுக்கு தெரியுமா?

மோகனின் மரணம் ஒரு பக்கம். மறுபக்கமோ 4 தேசிய விருதுகள் வென்ற பிரபல கலை இயக்குநரான நிதின் தேசாய் தன்னுடைய ஸ்டுடியோவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த தகவல் அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துவிட்டார்.

நிதி பிரச்சனையால் நிதின் தேசாய் இப்படி செய்திருக்கக்கூடும் என்று மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. மகேஷ் பால்டி தெரிவித்தார். ரூ. 252 கோடி கடன் பிரச்சனையால் நிதின் தேசாயின் நிறுவனம் அல்லாடியிருக்கிறது.

நிதின் தேசாயின் நண்பரான பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்தே கூறியிருப்பதாவது,

நிதின் இறப்பதற்கு முந்தைய நாள் நான் அவருடன் பேசினேன். போனது போகட்டும் முதலில் இருந்து புதிதாக ஆரம்பியுங்கள் என்று அறிவுரை வழங்கினேன். நான் அவருடன் அடிக்கடி பேசி, அறிவுரை வழங்குவேன்.

அமிதாப் பச்சனுக்கு கூட நிதி பிரச்சனை ஏற்பட்டது. அவர் அதை எல்லாம் தாண்டி வந்து தற்போது நன்றாக இருக்கிறார் என நிதினிடம் தெரிவித்தேன். கடன் பிரச்சனையால் ஸ்டுடியோ போனாலும் பரவாயில்லை, முதலில் இருந்து துவங்குங்கள் என்றார். அவரின் மரணம் குறித்து அறிந்து மிகவும் கவலையாக இருக்கிறது என்றார்.

நிதின் தேசாயின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.