'நான் முதல்வன்' மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 7,500 ஊக்கத்தொகை… தகுதி தேர்வு எப்போது?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு

வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2023-24 ஆண்டுக்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, UPSCதேர்வுகளுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும்தேவையான வசதிகளை செய்யும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும முதல் நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும் என்றும் அறவிக்கப்பட்டது. சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தமிழக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதன்படி TNSDC கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.