விசேட படையணியின் பிரிகேடியர் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதியாக 2023 ஜூலை 20 கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதிக்கு இராணுவ கல்வியற் கல்லூரியினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நினைவுதூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
அணிவகுப்பு மரியாதையின் பின்னர் பிரிகேடியர் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ‘பிரித்’ பாராயணம் மற்றும் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது புதிய நியமனத்தின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்,
பின்னர் அவர் சீன-லங்கா நட்புறவு கேட்போர் கூடத்தில் படையினருக்கு உரையாற்றுகையில், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் நோக்கங்கள், பார்வை மற்றும் பணியை நிறைவேற்றுவதில் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் முடிவில், அவர் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடன் உரையாடினார்.