டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. ஞானவாபி கமிட்டி சார்பில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகக் கேட்டுக்கொண்டது. மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குத் தடைவிதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றம், […]
