தமிழக ஓட்டல்களில் வந்தது தடை… ஸ்மோக்கிங் ரூமிற்கு குட்பை… அரசிதழில் பளீச்!

புகையிலை பொருட்களின் பயன்பாட்டை எத்தகைய கடும் நெருக்கடிகள் வந்தாலும் தவிர்க்க முடியாதது போல தெரிகிறது. ஏனெனில் பொது இடங்களில் இன்று கூட சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். டீ கடைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவற்றில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஓசி பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர்கள் மண்டை உடைப்பு

புகையிலை பயன்பாடு

தட்டி கேட்டு அடிதடியாகிய சம்பவங்களும் இருக்கின்றன. பொது இடங்களில் அப்படி செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் புகையிலை பயன்படுத்தும் நபர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு அருலிருக்கும் நபர்களும் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக அரசு சட்டம்

இந்த சூழலில் ஸ்டார் ஓட்டல்கள், மால்கள், சில உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நினைத்து தமிழக அரசு களத்தில் இறங்கியது. உணவகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் புகைப்பிடிக்கும் அறைகள் அமைக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியது.

TN Gazette1

உணவகங்களில் தடை

இது ஏற்கனவே அமலில் இருந்தாலும், தற்போது தான் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உணவகங்கள் என்பவை சாராயம், மது, கோதுமை சாராயம், பார்லி சாராயம் அல்லது பிற தானிய வகையிலான மதுபானங்கள் அல்லாத சிற்றுண்டி வகைகளை சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இடமாகும்.

TN Gazette2

காவல் ஆய்வாளர் கண்காணிப்பு

இதில் புகைக்குழல் கூடம் எனப்படும் புகைப்பிடிக்கும் அறைகள் இருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. இதை மாநில அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் படிநிலைக்கு குறையாத அலுவலர் கண்காணிக்கலாம். சட்டத்தை மீறி நடக்கும் போது நேரடியாக ஆய்வு மேற்கொள்ளலாம்.

புகைப்பிடிக்கும் அறைகள்

புகைக்குழல் கூடத்தின் உட்பொருள் அல்லது துணைப் பொருளாக பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது வேறு எதையும் கைப்பற்றும் அதிகாரம் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ், உணவகங்களில் புகைப்பிடிக்கும் அறைகள் இருந்தால் அவை சீல் வைக்கப்படும்.

தண்டனையும், அபராதமும்

அதற்கு காரணமான உரிமையாளர் உள்ளிட்டோருக்கு ஓராண்டிற்கு குறையாத சிறை தண்டனை வழங்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும். மேலும் 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.