
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் சில கதைகள் கேட்டுள்ளார். விஜய் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஆக., 4) அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி உடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். பின்னர் இருவரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.