புதுடில்லி, ராஜ்யசபாவில் நேற்று சபை தலைவர் ஜக்தீப் தன்கர், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே நடந்த சுவாரஸ்யமான விவாதத்தால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் கடுமையான வாதங்கள், எதிர்ப்புகள், கோஷங்கள், அமளிகள் நடந்து வந்தன.
வழக்கத்துக்கு மாறாக நேற்று, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே நடந்த விவாதம், சபையில் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
சபையில் நடந்த விவாதம்:
கார்கே: நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள். அதனால்தான் என்னை பேச விடுவதில்லை.
தன்கர்: எனக்கு திருமணமாகி, 45 ஆண்டுகளாகிறது. என்னால் கோபத்தை வெளிப்படுத்த முடியாது. இங்கு சிதம்பரம் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக கோபத்தை காட்ட முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.
நீங்கள் அதுபோன்ற அதிகாரம் உள்ளவர் என்பதால், உங்களிடம் கோபத்தை காட்ட முடியாது.
தன் மனைவியை அதிகாரம் உள்ளவர் என்று ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டதால், சபையில் சிரிப்பொலி எழுந்தது.
தன்கர்: என் மனைவி இந்த சபையின் உறுப்பினர் இல்லை. உறுப்பினராக இல்லாதவர்கள் குறித்து பேசக் கூடாது. அதனால், என் கருத்தை, நான் கோபமாக இருப்பதாக திருத்தி கொள்கிறேன்.
கார்கே: நீங்கள் உள்ளுக்குள் கோபப்படுகிறீர்கள். ஆனால், அதை வெளிக்காட்டுவதில்லை.
இவ்வாறு இருவரும் வாதத்தில் ஈடுபட்டது சபையில் சில நிமிடங்களுக்கு கலகலப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்