Rajinikanth: சூப்பர் ஸ்டார், தளபதிக்கு எல்லாம் மேலே ஒருவர் இருக்கார், அவர் தான்…: ரோபோ சங்கர்

சூப்பர் ஸ்டார் தலைப்பு தொடர்பாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்டார் விவகாரம் பற்றி ரோபோ சங்கரிடம் கேட்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்
அதற்கு அவர் கூறியதாவது,

தலைவர்னா சூப்பர் ஸ்டார் தான். தளபதினா அது விஜய் தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

அதன் பிறகு நடிகர்கள் வரும்போது அந்த இடம் காலியாக இருக்கும்போது அடுத்தவர்களுக்கு போகலாம்.

அடுத்த தலைமுறைக்கு தளபதி தான். சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் தளபதி தான். எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய். ஆனால் இவர்களுக்கு எல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். அவர் எங்களுடைய ஆண்டவர். உலக நாயகன். மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் என்றார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது குறித்து இயக்குநரும், நடிகருமான சேரனிடம் கேட்டதற்கு,

நான் யாருங்க சொல்வதற்கு. அவங்க இரண்டு பேரும் சொல்லணும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். நான் இரண்டு பேரையும் வைத்து படம் பண்ணது இல்லை. அவங்க இரண்டு பேரின் ரசிகன். எனக்கு என் பொழப்பு முக்கியம். யாரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை என்றார்.

ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், தளபதி தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் குரைக்கும் நாய், சீண்டும் காக்கா என ரஜினி சொன்ன குட்டிக் கதை விஜய்க்கு தான் என பேச்சு கிளம்பியது.

Jailer: ஜெயிலர் தீயா இருக்கு, கப் அடிக்கும் பிகிலு: முதல் விமர்சனம் இதோ

குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை என்றார் ரஜினி. அவர் விஜய்யை தான் இப்படி சொல்லியிருக்கிறார் என பேசப்பட்டது.

இதற்கிடையே ரோபோ சங்கர் கூறியதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். விஜய்க்கு இப்பவே 50 வயதாகிவிட்டது. அவர் எல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடையாது. எங்க அண்ணன் சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலரோ, விஜய் இளைய தளபதியாக இருந்தவரை அவருக்கு எல்லாம் நன்றாக நடந்தது. என்று தளபதி ஆனாரோ அன்றில் இருந்து தான் பிரச்சனையே. படங்களின் கதையும் சரியில்லை. அதனால் தலைப்பை பார்க்காமல் இருப்பதே விஜய்க்கு நல்லது.

அரசியலுக்கு வர நடிப்பில் இருந்து முழுக்கு போட நினைக்கும் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் டைட்டில் தேவையில்லாத ஒன்று என்கிறார்கள்.

விரைவில் அரசியல் கட்சியை துவங்கவிருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. கட்சியை துவங்கிவிட்டால் அரசியலில் கவனம் செலுத்த வசதியாக நடிப்புக்கு முழுக்கு போடும் ஐடியாவில் இருக்கிறார் விஜய். இதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

செப்டம்பர் மாதம் புதுக்கட்சியை துவங்குகிறார் விஜய் என்று கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைக்கிறாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.