
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரவேற்பை பெறும் ‛தயா'
‛கன்னத்தில் முத்தமிட்டால், சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஜேடி சக்ரவர்த்தி. தற்போது பவன் சதினேனி இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்துள்ள வெப்தொடர் ‛தயா'. ஈஷா ரெப்பா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கிரைம் கலந்த சஸ்பென்ஸ் தொடராக வெளியாகி உள்ள இந்த தொடர் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தயாவின் ஒவ்வொரு புரொமோஷனும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இதன் டிரெய்லர் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆன பிறகு இன்னும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஒட்டுமொத்த ‛தயா' குழுவினரின் அர்ப்பணிப்பால் இந்த தொடர் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி தந்துள்ளது.
நடிகர் ஜேடி சக்ரவர்த்தியின் முதல் தெலுங்கு அறிமுக ஓடிடி இதுவாகும். ‛சேனாபதி' புகழ் இயக்குனர் பவன் சதினேனியின் அட்டகாசமான கதை மற்றும் திரைக்கதையில் இந்த தொடர் வெளியாகி உள்ளது. ஜே டி சக்கரவர்த்தி இதுவரை கண்டிராத புதிய கேரக்டரில் அசத்தி உள்ளார். மேலும் திறமையான நடிகர்களும் தங்கள் நடிப்பால் இந்த தயா மூலம் ஈர்க்கிறார்கள்.
‛சேவ் தி டைகர்ஸ் மற்றும் சைதான் தொடர்களுக்கு பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு மூன்றாவது வெற்றியாக இந்த ‛தயா' தொடர் அமைந்துள்ளது.