
மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் பொன்ராம். கடைசியாக இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ' டி. எஸ். பி' படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியிடம் வெற்றிமாறன் ஒன் லைன் கதை ஒன்று குறித்து பேசியுள்ளார். இந்த கதையை பொன்ராமிடம் கூறி ஒரு படமாக உருவாக்குமாறு விஜய் சேதுபதி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.