வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்ரா: உ.பி.யில், மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் பா.ஜ. எம்.பி.,க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.
உ.பி. மாநிலம் எட்டவா தொகுதி பா.ஜ. எம்.பி., ராம் ஷங்கர் காத்ரியா, இவர் 2011-ல் ஆக்ரா எம்.பி.யாக இருந்த போது ஷாகட் மால் என்ற கட்டத்தில் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரியை தாக்கியதாக போலீசில் புகார் கூறப்பட்டது.
![]() |
வழக்கு எம்.பி., எல்.எல்.ஏ..க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 12 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. நீதிபதி அர்ஜூன், வழங்கிய தீர்ப்பில், அரசு தரப்பு போதிய சாட்சியங்களை சமர்பிக்கவில்லை என்பதால் எம்.பி., ராம் ஷங்கர் காத்ரியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக ராம்ஷங்கர் காத்ரியா தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement