வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குருகிராம்: ஹரியானாவில் நூஹ் மவாட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் குருகிராமில், மத வழிபாட்டு ஊர்வலம், ஜூலை 31ல் நடந்தது. இங்கு நுாஹ் மாவட்டத்தை ஊர்வலம் அடைந்தபோது, ஒரு கும்பல், ஊர்வலத்தின் மீது கல் வீசியது.
இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு போலீசார், பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கு பரவியதை அடுத்து, அங்கும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் நூஹ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நூஹ் மாவட்டத்தில் ஆக.08 வரை இணையதள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement