Jailer: 'ஜெயிலர்' டிரெய்லரில் சிவகார்த்திகேயனை கண்டுபிடித்த ரசிகர்கள்: இதென்ன புது ட்விஸ்ட்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

‘அண்ணாத்த’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனத்தை தொடர்ந்து நெல்சனுடன் இணைந்தார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இவர்கள் இரண்டு பேர் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ எப்படி இருக்கும் என்பதை காண ஒட்டுமொத்த திரையுலகினர் ஆர்வமாக உள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. குடும்பத்துக்காக அமைதியாக இருக்கும் முத்துவேல் பாண்டியன், அதே பேமிலிக்காக ஜெயிலராக அவதாரம் எடுப்பது தான் இந்தப்படத்தின் கதை என்பது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. மேலும், பாட்ஷா பாணியில் ஜெயிலர் உருவாகி இருக்கும் என்றும் டிரெய்லர் பார்த்த பிறகு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கெல்லாம் பதில் கிடைக்க 10 தேதி வரை வெயிட் பண்ணி ஆக வேண்டும். அன்றுதான் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஜெயிலர்’. இதனிடையில் அண்மையில் வெளியான டிரெய்லரை டிகோட் செய்து அலசி ஆராய்ந்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் ‘ஜெயிலர்’ டிரெய்லரில் சிவகார்த்திகேயனை கண்டுபிடித்து பயர் விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Chiyaan Vikram: பகையை மறந்து விக்ரம் செய்துள்ள காரியம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி.!

அதாவது ரஜினி, சிவகார்த்திகேயன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் வீடாக காட்டப்படும் இடத்தில் ஒரு ஓரமாக உள்ளது. இதனை எப்படியோ லென்ஸ் வைத்து பார்த்து கண்டுபிடித்துவிட்டனர் ரசிகர்கள். ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே சிவகார்த்திகேயன் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ டிரெய்லரில் சிவகார்த்திகேயன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், மிர்னா, ரித்விக் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ பட ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் தற்போது ரஜினியின் ‘தலைவர் 170’ பட வேலைகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jailer: மேத்யூவாக மோகன்லால்.. கூஸ்பம்ஸ் கன்பார்ம்: ‘ஜெயிலர்’ படம் குறித்த சூப்பரான தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.