புதுடில்லி, அந்தமான் தீவுகளின் துணைநிலை கவர்னருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம், அந்த யூனியன் பிரதேசத்தின் தலைமை செயலர் கேசவ் சந்திரா மற்றும் துணைநிலை கவர்னர் டி.கே.ஜோஷி ஆகியோரின் கீழ் நடந்து வருகிறது.
தீவு நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்து வரும், 4,000 தினக்கூலி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் போர்ட் பிளேர் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அகவிலைப்படி மற்றும் ஊதியத்தை உயர்த்தியது. இந்த பணப் பலன்களை அளிக்க அந்தமான் தீவு நிர்வாகம் மறுத்து வந்தது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்த தலைமை செயலர் கேசவ் சந்திராவை சஸ்பெண்ட் செய்தும், துணைநிலை கவர்னர் ஜோஷிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement