ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் காடுகளின் உயரமான பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்குகுல்காம் மாவட்ட போலீஸாரும் ராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
இவர்கள் உடனடியாக அப்பகுதி யில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 3 வீரர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று
தெரிவித்தனர். மோதலுக்குப் பின் தப்பிச் சென்ற அவர்களை பிடிக்க கூடுதல் படையினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு விரிவான அளவில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.