டென்ஷனில் ஸ்டாலின்… அந்த 3 விஷயங்கள்… அலர்ட்டும், டார்கெட்டும்… கலக்கத்தில் திமுக மா.செ.,க்கள்!

மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி பொது மேடைகளில் நிர்வாகிகள் வெட்ட வெளிச்சமாக சண்டை போட்டு கொள்கின்றனர். இதை நானே பார்த்திருக்கிறேன். இப்படி இருந்தால் வரும் மக்களவை தேர்தலில் எப்படி கைகோர்த்து உழைத்து வெற்றி பெற முடியும்.

​திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்சனாதான சக்திகள் மிகத் தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் இவற்றை நமது திராவிட மாடல் பின்னுக்கு தள்ள வேண்டாமா? உங்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் எப்படி? என கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் இப்படி நடந்துள்ளது. மேலும் முக்கியமான மூன்று விஷயங்களை அனைவரது மத்தியிலும் போட்டு உடைத்திருக்கிறார்.​தென்காசி மோதல் சம்பவம்ஒன்று, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயபாலன் நியமிக்கப்பட்டது. சமீபத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய பெருந்தலைவருக்கும் இடையிலான மோதல் பொதுமக்கள், ஊடகங்கள் முன்னிலையில் நடந்தது. இதை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதுபோல் இனி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என எச்சரிக்கை வகையிலேயே அவர் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் சர்ச்சைஇரண்டாவது, அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான செஞ்சி மஸ்தான் விவகாரம். தன்னை கேள்வி கேட்டவரிடம் மைக் வைத்து கொண்டே தடாலடியாக பதிலளித்துள்ளார். அப்போது சுற்றிலும் ஊடகங்கள் இருப்பதை கூட அவர் உணரவில்லை. அவரது பதில் நிதானமாக இல்லை. இதுபோன்ற விஷயங்களை தான் ஒருபோதும் விரும்பவில்லை எனக் கூறினார்.
​கட்சியும், ஆட்சியும் அனைவருக்குமானதுமூன்றாவது, நமது கட்சி அனைவருக்கும் பொதுவானது. எனவே நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது என நினைத்து கொள்ள வேண்டாம். இதேபோல் ஆட்சியும். இது மக்களுக்கான ஆட்சி என்பதை மறந்துவிட வேண்டாம். அடுத்து யாரும் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையெனில் நடவடிக்கைகள் சீரியசாக இருக்கும்.
​டென்ஷன் மோடில் ஸ்டாலின்வரும் மக்களவை தேர்தலில் திமுகவின் வியூகங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே உட்கட்சி பூசல்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு அதில் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். கிட்டதட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டென்ஷன் மோடில் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு ஆடுகள் களையெடுப்புசமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. அதாவது, ஆட்சி ரீதியில் அதிகாரிகள் மாற்றம், கட்சி ரீதியில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம். இதில் முதல் விஷயம் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது விஷயத்தின் தான் சற்றே யோசனையில் இருக்கிறாராம். தேர்தல் நெருங்கும் வேளையில் அப்படி செய்தால் அதுவே அதிருப்தியாக மாறக்கூடும். தேவையற்ற சிக்கல் வேண்டாம். சொல்பேச்சு கேட்காத கருப்பு ஆடுகளை மட்டும் களையெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.