
மலையாளத்தில் நுழையும் தமன்
தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமான தமன், அதன்பிறகு தனது ரூட்டை இசைப்பக்கம் திருப்பினார். இந்த 20 வருட காலகட்டத்தில் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர் என்கிற மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ளார். இளம் முன்னணி ஹீரோக்களின் அதிகப்படியான சாய்ஸ் ஆகவும் தமன் தான் இருக்கிறார். அதே சமயம் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் முதன்முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார் இசையமைப்பாளர் தமன்.. நிவின்பாலி நடிப்பில் உருவாக உள்ள தாரம் என்கிற படத்திற்கு தான் இசையமைக்கிறார் தமன். தயாரிப்பாளர் லிஸ்ட்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் வினய் கோவிந்த் இயக்குகிறார். மலையாளத்திலும் தமன் வெற்றிக்கொடி நாட்டுவாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.