மாமல்லபுரம் செயல் அலுவலர் மேற்பார்பர்வையில் மாமல்லபுரம் சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண உரிம ஏலம் நடந்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு மற்றும் வாகன நிறுத்த கட்டணத்தைப் பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. ஆண்டு தோறும் இதற்காக பொது ஏலம் நடத்தி தனியாருக்கு உரிமம் அளிக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் உரிமம் ஒப்படைக்கும் நாள் தொடங்கி 2024 மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கு, ரூ.15 லட்சம் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. […]
